January 5, 2018

டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி பெருந்தலைவர் மக்கள் கட்சி போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் போகளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசடிவண்டல் என்ற ஊரில் நாடார் மகாஜனசங்கத்தால் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூடத்திற்கு அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்றச்சொல்லி அவ்வூர் மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் கடை அகற்றாததினால் ஜனவரி 3ந் தேதி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் அரசடிவண்டல் கிராமத்தில் உள்ள மதுபான கடைக்கு அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்ப பட்டனர். தலைவர் என் ஆர் டி அவர்கள் கண்டன சிறப்புரை ஆற்றினார்கள்.
ஆர்பாட்ட முடிவில் தமிழகரசிடம் எந்த முடிவும் வராததால் தலைவர் என் ஆர் டி அவர்கள் சாலையில் அமரவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தலைவர் பின்னே அமர்ந்தார்கள்.
அரசு அதிகாரிகள் வந்து கடையை உடனடியாக அகற்றினால் தான் போராட்டத்தைத் கை விடுவோம் என்று தலைவர் கூறியதன் பேரில் டாஸ்மாக் உயரதிகாரி உடனடியாக வந்து தலைவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்று முதல் அரசடிவண்டல் கிராமத்தில் உள்ள மதுக்கடையை அகற்றுகிறோம் என்று மக்களிடையே மைக்கில் பேசி உறுதியளித்த பிறகுதான் தலைவர் போராட்டத்தை கைவிட்டார்கள்.
அவ்வூர் பெண்கள் எல்லாம் ஒன்று கூடி தலைவரிடம் நாங்கள் ஆறு முறை போராடிவிட்டோம்.எந்த முடிவும் கிடைக்கவில்லை.
ஆனால் நீங்கள் வந்த பிறகு தான் எங்களுக்கு விடிவு கிடைத்தது என்று மனதார பாராட்டினார்கள்.

அடுத்த 2 மணி நேரத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் லாரியை கொண்டு வந்து கடையை காலி செய்கின்றனர் என்று அவ்வூர் பெண்களே தலைவருக்கு தொலைபேசியில் மகிழ்ச்சியுடன் செய்தியை பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.

டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.

About gpppadmin