June 26, 2018

சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களின் 113வது பிறந்தநாள்!

திருத்தனியை மீட்டு தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.அவர்களின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஜுன் 26 ந் தேதி காலை சென்னை தி நகரில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.தலைவருடன் மாநில துணை தலைவர் கல்பாக்கம் மோகன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம் ஏ எம் பாலாஜி மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி பி ஜயர் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம் வைகுண்ட ராஜா மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் புரசை சி நாகராஜ் காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் முருகேசபாண்டி தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன்.அருணாசலபாண்டியன் வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஜஸ்டின் சாம்ராஜ் செயலாளர் பொன்ராஜ்  வடசென்னை 37வது வட்ட தலைவர் இளங்கோ தி.நகர் பகுதி தலைவர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

e94a61d9-50b9-4ee2-ae72-f19896e8efba

News & Updates
About ptmkadmin