January 19, 2019

பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.ஏ.எம்.பாலாஜி மறைவு.

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில கொள்கைபரப்புசெயலாளர் எம்.ஏ.எம்.பாலாஜி நேற்று காலை 10.30 மணிக்கு காலமானார் என்ற செய்தியை கேள்விப்பட்ட தலைவர் என்.ஆர்.டி.அவர்கள் 11.30 மணிக்கு பாலாஜியின் வீட்டுக்கு உடணடியாக நேரில் வந்து அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

தலைவருடன் மாநில வழக்கறிஞரணித்தலைவர்எம்.மணிவாசகம் தலைமைநிலையைசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்ஆகியோர் உடன் வந்தனர்.

மதியம் 1 மணிக்கு மாநில பொருளாளர் புழல் டாக்டர் ஏ.தர்மராஜ் அவர்களும் இரவு 9 மணிக்கு தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில பொதுசெயலாளர் ஏ.செல்லப்பன் அவர்களும் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.பி.சந்திரன் செயலாளர் காளியப்பன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

About ptmkadmin