பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை சிவகங்கை தெற்கு மாவட்டம் சார்பில் காமராஜரின் 117 வது பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 18 ந் தேதி ஞாயிற்று கிழமை மாலை 6 மணிக்கு திருபுவனத்தில் உள்ள நாடார் உறவின்முறை திருமணமண்டபத்தில் சிவகங்கை மாவட்ட அமைப்பு செயலாளர் பி.பாலமுருகன்,மாநில மகளிரணி துணைசெயலலாளர் பி.விக்டோரியபாக்கியராஜ்.ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி,தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
விழாவில் மாநில துணைத்தலைவர் கல்பாக்கம் மோகன்,மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர். விஜயமாரீஸ் ,மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் ஜோஸசப் ஆரோக்யராசையா ,திருச்சி துறையூர் பிரபாகரன் ,டி..சி.தங்கதுரை,தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில பொருளாளர் எஸ்.சதாசிவம்,மாநில துணைப்பொதுச்செயலாளர் கே.வெற்றிராஜன்,மாநிலத்துணைத்தலைவர் கார்த்திகேயன்,விருதுநகர் மாவட்ட மேற்கு தலைவர் முத்துராஜ், மாநில மகளிரணி அமைப்பாளர் ஹெலன்செல்வராஜ்,மணிமொழி,கலா,மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில மகளிரணி துணைச்செயலாளர் கீதாபாலு,மதுரை மாவட்டசெயலாளர் முட்டைச்செல்வம்,மதுரை மாநகர் செயலாளர் சபரிசெல்வம்,ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.