புதுச்சேரி மாநிலம் தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 117 வது பிறந்தநாள் விழாவும் 8 ம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழாவும் நேற்று ஆகஸ்ட் 11 ந் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 6 மணிக்கு புதுச்சேரி பாக்குமுடையான்பட்டு பார்வதி திருமணமண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
விழா புதுச்சேரி மாநிலம் தமிழ்நாடு நாடார் பேரவையின் தலைவர் எம்.ராமர் தலைமையிலும் பொருளாளர் கள்ளங்கொண்டான் முன்னிலையிலும் நடைபெற்றது.முன்னதாக செயலாளர் கே.கே.சாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் தமிழ்நாடுநாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.. தனபாலன் அவர்களும் புதுச்சேரி மாநில சட்டமன்ற சபாநாயகர் சிவக்கொழுந்து,பேரவையின் பொதுச்செயலாளர் சேலம் ஏ .செல்லப்பன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 10 வது 12 வது வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றினார்கள்.
தலைவருடன் பேரவையின் மாநிலதுணைத்தலைவர் கல்பாக்கம் மோகன் ,மாநில அமைப்பு செயலாளர் ஆசைத்தம்பி,மாநில தலைமைநிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார், மாநில அமைப்பாளர் எஸ்.வி.ஆர். விஜய்மாரீஸ் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ,சேலம் தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.பி. சந்திரன் ,விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜோசப் ஆரோக்கிய ராசையா ,மாவட்ட அமைப்பு செயலாளர் சோலைசேரி ரமேஷ்,சிவகங்கை மாவட்ட அமைப்பு செயலாளர் பாலமுருகன்,மாநில மகளிராணி துணைச்செயலாளர் விக்டோரியபாக்கியநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .