தமிழக பாரதீய ஜனதா கட்சியின் வரவேற்பு குழுவின் மாநிலத்தலைவர் எஸ்.சங்கர் -மாலா சங்கர் தம்பதியருக்கு சஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுப முகூர்த்த விழா இன்று செப்டம்பர் 10 ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை சென்னையில் நடந்தது.விழாவிற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தினார்கள்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன் .ராதாகிருஷ்ணன் அவர்களுடனும் பா.ஜ .க .வின் தேசிய செயலாளர் எச்.ராஜா,மற்றும் இலங்கை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடனும் தலைவர் என்.ஆர்.டி.அவர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.