பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் நியமித்ததை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேற்று செப்டம்பர் 2 ந் தேதி திங்கட்கிழமை காலை பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் கமலாயத்தில் தமிழிசை சௌந்திரராஜன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.
தலைவருடன் மாநில செய்தித்தொடர்பாளர் ஜி.சந்தானம், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் தி.ராஜசுதாகர் ,செயலாளர் ஈகை.தி.விஜயன்,தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் சாமுவேல் ரவி,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை சி.நாகராஜ்,காஞ்சி தெற்கு மாவட்ட பொருளாளர் முருகேசபாண்டியன்,தி.நகர் தொகுதி தலைவர் அலெக்சாண்டர் மற்றும் பலர் சென்றனர்.