நடந்து முடிந்த நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வின் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அவர்கள் வெற்றி பெற்றதை முன்னிட்டு அதிமுக சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் மாநில, மாவட்ட, ஒன்றிய ,நகர,மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.இதில் நெல்லை கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவர் பிரதீபா தன் மகள் ஷான்சியாவுடன் வந்திருந்தார்.கூட்டம் நடந்துகொண்டு இருந்தபோது பிரதீபா துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு தன் மகள் ஷான்ஸியாவை வைத்து சால்வை அணிவிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டவர் தலைவர் என்.ஆர்.டி.அவர்களிடம் தெரிவித்தபோது தலைவர் அவர்கள் மகளிரணி தலைவர் பிரதீபா, ஷான்சியாவையும் மேடைக்கு அழைத்து துணைமுதல்வரிடம் அழைத்து சென்று ஷான்சியாவை சால்வையும் பூங்கொத்தும் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.துணைமுதல்வரும் அந்த குழந்தைக்காக எழுந்து நின்று சால்வையும் பூங்கொத்தையும் மகிழ்ச்சியோடு பெருந்தன்மையோடு பெற்றுக்கொண்டது அனைவரையும் கவர்ந்தது.