குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான நவம்பர் 1 ந் தேதி குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களை பெருமைபடுத்தும் விதமாக பெருந்தலைவர் மக்கள் கட்சி மாநில இளைஞரணி சார்பில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் குமரி மாவட்டத்துக்கு வருகை தந்து இன்று காலை 10 மணிக்கு களியக்காவிளையில் குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் நினைவை போற்றும் விதமாக நடைபெற்ற மருத்துவ முகாமை தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மாநில இளைஞரணி விக்டர்விஜய் ஏற்பாட்டின்படி தலைவர் தலைமையில் களியக்காவிளையில் இருந்து வாகனப்பேரணியாக நாகர்கோவிலில் உள்ள குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்துக்கு சென்று மார்ஷல் நேசமணி அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.அடுத்து நாகர்கோவில் பேருந்து நிலையம் முன்புள்ள மார்ஷல் நேசமணி சிலைக்கு தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ.தர்மராஜ்,மாநில துணைத்தலைவர்கள் கல்பாக்கம் த.மோகன்,எஸ்.எம். குருசாமி,மாநில செயலாளர் ஜோ.ஆசைதம்பி,மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார், மாநில கொள்கைபரப்பு செயலாளர் எஸ்.வி.ஆர்.விஜய்மாரிஸ்,குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஜெபராஜ்,செயலாளர் டார்வின்,குமரி கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல் முருகன்,மாவட்ட அமைப்பு செயலாளர் அன்புகிருஷ்ணன்,மதுரை மாவட்ட செயலாளர் முட்டை செல்வம் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் ராமஜெயம் மற்றும் மாநில, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.