January 13, 2020

தீவிபத்து! 

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வடசென்னை மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் சித்ரா -ராஜி, விஜயலட்சுமி – தாஸ் ஆகிய இருவரும் சென்னை வியாசர்பாடியில் மேகஸின்புரத்தில் மாடியில் குடியிருந்த குடிசைவீடுகள் டிசம்பர் 28 ந் தேதி காலை 6.30 மணிக்கு தீடிரென தீ பிடித்துக்குக்கொண்டதில் வீட்டில் உள்ள அணைத்து பொருள்களும் தீயில் எரிந்து சாம்பலானது.செய்தியை கேள்விபட்டதும் தலைவர் என்.ஆர். டி.அவர்களின் ஆணைக்கிணங்க மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் உடனடியாக அங்கே சென்று பார்வையிட்டு நிலவரத்தை தலைவரிடம் சொன்னவுடன் தலைவர் என்.ஆர்.டி அவர்கள் அந்த இருவரின் குடும்பத்துக்கு தேவையான பொருட்களை அவர்கள் குடும்பத்துக்கு வழங்க சொன்னார்கள்.அதன்பேரில் நேற்று டிசம்பர் 29 ந் தேதி கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்,,மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர்.தி.நகர் தொகுதி தலைவர் அலெக்ஸ்,தி.நகர் ரமேஷ்,வடசென்னை மாவட்ட மகளீரணி குட்டிராணி,தீபிகா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வழங்கினார்கள்.

About ptmkadmin