இந்திய நாட்டின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று ஜனவரி 26ந் தேதி காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மறைந்த தலைவர்களுக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ தர்மராஜ்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி,செயலாளர் வி.எஸ். கே.செந்தில்குமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சி.எஸ். விக்டர்.துணை செயலாளர் அயன்புரம் மாரி,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சி.நாகராஜ், காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசபாண்டியன்,வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஜஸ்டின் சாம்ராஜ், தி.நகர் தொகுதி தலைவர் அலெக்ஸ்,குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஏ.சி.தர்மராஜ்,செயலாளர் ஆர். பாலமுருகன்,பொருளாளர் உதயகுமார் துணை செயலாளர்கள் ஆர். சிவபாலன்,எம். சுப்பிரமணியன் துணை தலைவர் பாலராமசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.