January 29, 2020

பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்!

சென்னை உள்நாட்டு விமானநிலையத்திற்கு காமராஜர் பெயரும் பன்னாட்டு விமானநிலையத்திற்கு அண்ணா பெயரும் நடைமுறையில் இருந்தது.ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் இரண்டு பேருடைய பெயரும் மறைக்கப்பட்டது.அதே போல சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் விமானத்தில் காமராஜர் விமானநிலையத்திலிருந்து புறப்படுகிறோம் என்றும் வந்திறங்கும் விமானத்தில் காமராஜர் விமானநிலையம் வந்தடைந்துள்ளோம் என்று அறிவிப்பு வெளியானதையும் நிறுத்திவிட்டார்கள்.சென்னை பன்னாட்டு விமானத்திலும் அறிவிப்பை நிறுத்திவிட்டார்கள்.இருவருடைய பெயர் பலகையும் படமும் அகற்றப்பட்டுவிட்டது.இதை கண்டித்து பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் நாடார் கூட்டமைப்பு,நாடார் சங்கங்கள்,நாடார் இயக்கங்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.முடிவில் கடந்த செப்டெம்பர் 9 ந் தேதி விமானநிலைய முற்றுகை போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து அன்றய இயக்குனர் ஸ்ரீ குமார் அவர்கள் செப்டம்பர் 3 ந் தேதி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிற நவம்பர் மாத இறுதிக்குள் பெயர் பலகையும் விமானத்தில் அறிவிப்பும் வெளியிடுகிறோம் என்று உத்திரவாதம் அளித்தார்கள்.ஆனால் இதுவரை அது நடைமுறைக்கு வராததால் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் இன்று ஜனவரி 22 ந் தேதி புதன்கிழமை காலை விமானநிலைய இன்றய இயக்குனர் திரு.தீபக் அவர்களை சந்தித்து எங்கள் கோரிக்கை என்னவாயிற்று என்று கேட்டபோது இரு தலைவர்களின் படங்கள் ஏற்கனவே வைக்கப்பட்டு உள்ளது என்றும் விமானத்தில் சொல்லும் அறிவிப்புக்கு மத்தியரசிடம் சிபாரிசு செய்து விரைவில் அதற்க்கு ஆவண செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்கள். தலைவருடன் மாநில துணை தலைவர் கல்பாக்கம் மோகன்,மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் மணிவாசகம்,மாநில தலைமைநிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தித்தொடர்பாளர் ஜி.சந்தானம்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,திநகர் தொகுதி தலைவர் அலெஸ் அகில இந்திய நாடார் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் ஆகியோர் உடன் சென்றனர். பிப்ரவரி மாதம் எங்கள் கோரிக்கை அமுல்படுத்த படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் தலைவர் என்.ஆர்.தனபாலன் அறிவித்துவிட்டு வந்தார்கள்.

About ptmkadmin