தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கு 76 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களுடைய 125 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
நிகழ்ச்சியில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ தர்மராஜ்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி,செயலாளர் வி.எஸ். கே.செந்தில்குமார்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சி.எஸ். விக்டர்.துணை செயலாளர் அயன்புரம் மாரி,மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சி.நாகராஜ், காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் ஏ.முருகேசபாண்டியன்,வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஜஸ்டின் சாம்ராஜ், தி.நகர் தொகுதி தலைவர் அலெக்ஸ்,குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஏ.சி.தர்மராஜ்,செயலாளர் ஆர். பாலமுருகன்,பொருளாளர் உதயகுமார் துணை செயலாளர்கள் ஆர். சிவபாலன்,எம். சுப்பிரமணியன் துணை தலைவர் பாலராமசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.