குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இனணக்க பல போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற குமரி தந்தை மார்ஷல் நேசமணி அவர்களை போற்றும் விதமாக நவம்பர் 1ந் தேதியை தமிழகரசு தமிழக தினமாக கொண்டாடுகிறது.அதனை முன்னிட்டு இன்று காலை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் நாகர்கோவில் பேருந்து நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள்குமரி கிழக்கு மாவட்ட தலைவர் என்.அன்புகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். அடுத்து வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,மாநில கொள்கை பரப்புச் செயலாளர் எஸ் வி ஆர் விஜய்மாரிஸ் ,குமரி மேற்கு மாவட்ட தலைவர் ஜான்சன்,செயலாளர் பாபு டேனியல் மற்றும் 100 க்கும் மேற்பட்ட குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.