May 27, 2022

சென்னை விமான நிலைய போராட்டத்துக்குப் பிறகு விமான நிலையத்தில் காமராஜர் படம் வைக்கப்பட்டிருக்கிறது!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற சென்னை விமான நிலைய போராட்டத்துக்குப் பிறகு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்க கூடிய முக்கிய பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் படம் வைக்கப்பட்டிருக்கிறது.
வெளியூர் செல்வதற்காக தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மனைவி வயலட் தனபாலன் அவர்களுடன் இன்று விமான நிலையம் சென்ற போது காமராஜர் படத்தின் முன் நின்று மகிழ்ச்சியடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

News & Updates
About ptmkadmin