July 12, 2022

சுதந்திரபோராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் சிலைக்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்தார்!

சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானந்தம், வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் வியாசை கனகராஜ், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் எல்.சுந்தரலிங்கம்,தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் எஸ் சாமுவேல் ரவி, காஞ்சி மாவட்ட பொருளாளர் ஏ.முருகேச பாண்டியன், குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஏ.சி.தர்மராஜ், தி.நகர் தொகுதி தலைவர் எம். எம்.டி.ஏ .பாலமுருகன், விருகம்பாக்கம் தொகுதி தலைவர் மணிராஜ் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர் .

News & Updates
About ptmkadmin