தமிழகத்தில் மது போதை கலாசாரம் நாளுக்கு நாள் மாணவ – மாணவிகளிடையே கரையானைப் போல வெகு வேகமாக பரவி வருகிறது.சமூக வலைதளங்களில் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதும்,புகை பிடிப்பதும்,மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வந்து ஆசிரியர்களை தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு மாணவன் பள்ளி சீருடையில் மது குடித்துவிட்டு போதையில் தள்ளாடி சாலையில் விழுந்துவிட்டான். அவனுடன் படிக்கும் சக மாணவன் அந்த மாணவனை கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்து சென்று இருக்கிறான்.இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கிறது.மது மட்டும் இல்லாமல் கஞ்சா பழக்கத்துக்கும் மாணவ்ர்கள் அடிமையாகி வருகிறார்கள்.இப்படியே போனால் மாணவர் சமுதாயம் போதைக்கு அடிமையாகி கொலை கொள்ளைக்கு இழுத்து சென்றுவிடும். எனவே தமிழக அரசு விரைவில் இதற்கு நிரந்தர முடிவு எடுக்காவிட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.