சிக்கிம் மலைப்பாதையில் ராணுவ வீரர்களை அழைத்து சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்து 16 ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் .விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் படுகாயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் பரிபூரணமாக குணமடைந்து திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள்.