நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேள்விப்பட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். மிகப்பெரிய நகைச்சுவை கலைஞனை நாட்டுக்கு தந்த சரோஜினி அம்மையார் அவர்களை இழந்து தவிக்கும் நடிகர் வடிவேலு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.