September 16, 2019

விமான நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும்! 

சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் விமானநிலையம் என்றும் பன்னாட்டு விமானநிலையத்திற்கு அண்ணா விமானநிலையம் என்றும் இரண்டு விமானநிலையங்களில் காமராஜர், அண்ணா ஆகியோரது புகைப்படங்களை வைக்க வேண்டும் என்றும் விமானம் புறப்படும் போதும் இறங்கும் போதும் காமராஜர்,அண்ணா பெயர்களில் அறிவிப்பும் ,இருவருடைய மார்பளவு சிலைகளை விமனநிலையங்களில் வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவரும் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி.தமிழ்நாடு நாடார் பேரவை,நாடார் சங்க கூட்டமைப்பு தேசிய நாடார் பேரவை, மற்றும் நாடார் சங்கங்கள்,நாடார் அமைப்புகள் சார்பில் சென்னை விமானநிலைய முற்றுகை போராட்டம் செப்டம்பர் 9 ந் தேதி நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட சென்னை விமானநிலைய இயக்குனர் ஸ்ரீ சுரேஷ் அவர்கள் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் வாருங்கள் இது குறித்து பேசுவோம் என்று அழைத்ததின் பேரில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் மாநில பொருளாளர் புழல் .ஏ.தர்மராஜ்,மாநில தலைமைநிலையசெயலாளர் எம்.ஆர்.சிவகுமார்.மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம்,சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா,வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்,தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன்,காஞ்சி தெற்கு மாவட்ட பொருளாளர் முருகேசபாண்டியன், தி.நகர் தொகுதி தலைவர் அலெக்ஸ்சாண்டர்,நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல்.
எச்.ஸ்டீபன்,செயலாளர் சுந்தரேசன், தேசியநாடார் பேரவை பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் இன்று மாலை 3.30 மணிக்கு விமானநிலைய இயக்குனர் ஸ்ரீ சுரேஷ் அவர்களை நேரில் சந்தித்தனர்.

விமானநிலைய இயக்குனர் ஸ்ரீ சுரேஷ் அவர்கள் உடனடியாக சென்னை உள்நாட்டு விமானநிலையதிற்கு காமராஜர் பெயரையும் பன்னாட்டு விமானநிலையத்திற்கு அண்ணா அவர்கள் பெயரில் பெயர் பலகை வைப்பதாகவும் மேலும் விமானம் புறப்படும் போதும் இறங்கும் போதும் காமராஜர்,அண்ணா விமானநிலையம் என்று சொல்வதற்கு உடனே ஏற்பாடு செய்கிறேன் என்று விமானநிலைய இயக்குனர் ஸ்ரீ சுரேஷ் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடத்தில் தெரிவித்து போராட்டத்தை நிறுத்துங்கள் என்று க்கேட்டுக்கொண்டதினால் செப்டம்பர் 9ந் தேதி நடைபெற இருந்த விமானநிலைய முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.என்று என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார்கள்.

About ptmkadmin