September 16, 2019

புகார்! 

அச்சம் அகற்றிய அண்ணல் சௌந்திரபாண்டியனார் அவர்களின் 127 வது பிறந்தநாள் செப்டெம்பர் 15 ந் தேதி தமிழகம் முழுக்க மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகில் உள்ள சௌந்திரபாண்டியனார் சிலைக்கு தமிழக முன்னாள் இந்நாள் அமைச்சர் பெருமக்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்ற கட்சி நிர்வாகிகள் , பெருந்தலைவர் மக்கள் கட்சி ,தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகிகள் , நாடார் சங்க கூட்டமைப்பு ,சென்னை நாடார் சங்கம்,தேசிய நாடார் பேரவை.மற்றும் நாடார் உறவின்முறை சங்கங்களின் சார்பிலும் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம்.
இந்த ஆண்டும் அன்னாருக்கு மரியாதை செய்வதற்க்காக சிலை அமைந்து இருக்கும் இடத்திற்கு நேற்று செப்டம்பர் 3 ந் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் புழல் ஏ .தர்மராஜ் அவர்கள் தலமையில் மாநில தலைமைநிலைய செயலாளர் எம்.ஆர் .சிவகுமார், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட்,காஞ்சி மாவட்ட பொருளாளர் முருகேசபாண்டியன்,தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.பாண்டியன்,தி.நகர் தொகுதி தலைவர் அலெக்சாண்டார் நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன்,பொது செயலாளர் சுந்தரேசன்,மற்றும் பலர் அங்கு சென்று பார்வையிட்டபோது சௌந்தரதாபாண்டியனார் சிலைக்கு பின்புறம் சாலை பணியாளர்கள் தங்குவதற்கு தகரத்தில் கூடாரம் அமைத்து இருந்தார்கள்.தலைவர்கள் ஏணியில் ஏறி சிலைக்கு மாலை போடமுடியாத படி இருந்ததினால் மாநில பொருளாளர் புழல் டாக்டர் தர்மராஜ் அவர்கள் தலைமையில் தி.நகரில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.புகார் மனுவில் செப்டம்பர் 15ந் தேதி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிலைக்கு மாலை அணிவிக்க வருவார்கள்.கூடாரம் இருப்பதினால் தலைவர்கள் மேலே ஏறி மாலை போட முடியாது வருகிற தலைவர்கள் ரோட்டில் உள்ள தடுப்பு வேலி மீது ஏறி தாண்டி வந்துதான் மாலை போட வேண்டும் .எனவே காவல் துறையினர் கூடாரத்தை அகற்றி எங்கள் தலைவர்கள் மாலை அணிவிக்க வசதி செய்து தரும்படி மனு அளித்தார்கள்…காவல் ஆய்வாளர் திரு,சீனிவாசன் அவர்கள் இல்லாத காரணத்தால் புகார் மனுவை உதவி ஆய்வாளர் ஆனந்தன் அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தார்கள்.
இன்று செப்டம்பர் 4 ந் தேதி புதன்கிழமை காலை காவல் ஆய்வாளர் சீனிவாசன் அவர்கள் புழல் தர்மராஜ் அவர்களுக்கு போன் செய்து விசயத்தை கேள்விப்பட்டு உடனே இது எங்கள் கண்ட்ரோலில் வராது.இந்த பகுதியின் மண்டல அதிகாரி ஏ இ நம்பர் தருகிறேன் என்று அவர் நம்பரை கொடுத்தார்.அவரிடம் கேட்டதற்கு அவர் இதற்கு என்று மேல் அதிகாரி இருக்கிறார்கள் என்று அவர் நம்பரை கொடுத்தார்கள்..அந்த அதிகாரியின் பெயர் அல்டெக் . அவரிடம் புழல் தர்மராஜ் அவர்கள் விலாவாரியா எடுத்து சொன்னதும் சார் இரண்டே நாளில் தகர கூடாரத்தை அகற்றி விடுகிறோம் என்று கூறியிருக்கிறார்.
இரண்டு நாளில் கூடாரம் அகற்றப்படவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புழல் தர்மராஜ் கூறியுள்ளார்.

About ptmkadmin