மருத்துவத்துறையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வரும் பெருமைக்குரிய எங்கள் இனிய நண்பர் டாக்டர் J.P.ராஜ்குமார் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் வசந்தா மருத்துவமனண நடத்தி அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு மிகக் மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்து வருகிறார்கள். மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். அதனால் தான் என்னவோ தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் அவரது அன்பில் நட்பில் இருப்பார்கள். டாக்டர் அவர்கள் எப்பொழுதுமே என்மீதும் என் குடும்பத்தின் மீதும் அளவிட முடியாத அளவிற்கு அன்பு வைத்திருப்பார்கள்.அப்படிப்பட்ட என் உயிர்த்தோழர் டாக்டர் அவர்களின் 74 வது பிறந்த நாளில் நானும் அரிமா இயக்கத்தின் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் அரிமா சம்பத் அவர்களும் அவரை சந்தித்து மாலை, மற்றும் சால்வை அணிவித்து எங்களது பரவசத்தை அன்பை வெளிப்படுத்திய போது எங்களுக்குள் எல்லையில்லா ஆனந்தம் ஏற்பட்டது.
டாக்டர் அவர்கள் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நோய் நொடி இல்லாமல் மன நிம்மதியுடன் வாழ்ந்து ஏழை எளியோருக்கு மருத்துவ சேவை புரிந்திட வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்கள்.