பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 52 வது நினைவு தினம் அந்தியூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்
மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கதுரை அவர்கள் தலைமையிலும்
மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் முன்னிலையிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தென் மாவட்ட நாடார் சங்க தலைவர் நெல்லை மகாதேவன் அவர்கள் கலந்து கொண்டு ஐயாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வாசுதேவன், மாவட்ட துணைத் தலைவர் கேசவராஜ், வர்த்தக அணி செயலாளர் செங்கோட்டையன், மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கார்மேகம், நம்பியூர் ஒன்றிய பொறுப்பாளர் ராக்கியணன், கிருஷ்ணமூர்த்தி, அந்தியூர் நகர பொருளாளர் குமார், சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் சிவலிங்கம் மற்றும் கோவிந்தராஜ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் அந்தியூர் நகர செயலாளர் முஸ்தபா அவர்கள் நன்றி கூறினார்.

