November 11, 2026

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்குசெல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ.வை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும்என்.ஆர்.தனபாலன் வலியுறுத்தல் 

  கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தனது செல்போன் மூலமாக ஆபாச குருஞ்செய்தி அனுப்பியது அம்பலமாகியுள்ளது. மேலும், மது போதையில் இரவு நேரத்தில் மாவட்ட ஆட்சியரின் வீட்டிற்கு சென்றது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். பெண் மாவட்ட ஆட்சியர் தனது கணவரான விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமானிடம் எம்.எல்.ஏ. அனுப்பிய ஆபாச குருஞ்செய்தி விபரத்தை தெரிவிக்க அவரோ முறைப்படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை காவல்துறை தலைவரிடமும் புகார் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருவது வேடிக்கையாகவுள்ளது.

  தவெக அரசின் முக்கிய முழக்கமாக பெண்களின் பாதுகாப்பு பற்றிய பேசி வரும் நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் கொடுத்த புகாருக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தவெக கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற தவறுகளை செய்தால் கொள்கைக்கும், முழக்கத்திற்கும் விதிவிலக்கு இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த கொடிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ வை கட்சியை விட்டு நீக்கி, போக்சோ சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு என்.ஆர்.தனபாலன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

News & Updates
About ptmkadmin