பெருந்தலைவர் மக்கள் கட்சி ஓர் அறிமுகம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் விட்டுச்சென்ற அரசியல் பணியினை தொட்டுத்தூக்கி அவர் வகுத்த அரசியல் பாதையில் நடந்திடவும் , அவரது வரலாற்றை சாதனைகளை எடுத்துச் சொல்வதற்கும் நாடார் சமுதாய மக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும் பெருளாதாரத்தின் ஓரளவுக்கு நம் உயர்ந்திருந்தாலும் அரசியல் துறைகளில் சமுதாய மக்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளை பெற்றிடவும் பனைத் தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களும் நலன் காத்திடவும் , தாழ்த்தபட்ட, ஒடுக்கப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வீரம் , விவேகம் , வெற்றி என்ற தாரக மந்திரத்தை அடிதட்டு மக்களிடம் எடுத்துக்கூறி அவர்களிடம் விழிப்புணர்ச்சியையும், எழுச்சியையும் கொண்டு வருவதற்க்காக 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் தேதி பத்திரிக்கை உலகின் முடிசூடா மன்னன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன் அவர்களால் தொடங்கபட்ட கட்சி தான் நமது பெருந்தலைவர் மக்கள் கட்சி.
பெருந்தலைவர் மக்கள் கட்சி தொடங்கிய நேரத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் ஒருவர் வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாக, ஒருநாள் முதல்வர் போல பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒருநாள் தலைவராக இருந்து விட்டு சென்றதின் காரணத்தால் 2011 சட்டமன்றத்தேர்தலில் 5 தொகுதி கிடைக்கவேண்டிய நேரத்தில் டாக்டர் கலைஞர் அவர்கள் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியை மட்டும் நமக்கு ஒதுக்கித் தந்தார்கள். அதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி வேட்பாளராக கட்சியின் அமைப்பாளராக இருந்த என் .ஆர் .தனபாலன் அவர்களை போட்டியிடச் செய்தார்கள் தேர்தலில் சமுதாய தலைவர்கள் அனைவருமே பெருந்தலைவர் மக்கள் கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்கள். அந்தத் தேர்தலில் தி.மு.க .வின் மீது சுமத்தப்பட்டிருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை காரணங்காட்டி தி.மு.க.வை மக்கள் ஒதுக்கிவிட்டு அதிக இடங்களில் அ.தி.மு.க. வை வெற்றி பெறச்செ ய்ததினால் பெருந்தலைவர் மக்கள் கட்சி வெற்றி வாய்ப்பை இழக்க வேண்டியதாகி விட்டது.
தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் கட்சியை வழி நடத்துகிறவர்கள் எல்லாம் அமைதியாகிவிட்டார்கள். நான்கு மாதங்கள் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லாததால் சமுதாய மக்கள் விக்கித்துப் போனார்கள். பெருந்தலைவரின் முகம் பதித்த கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திவிட்டு, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு தேர்தலிலும் விட்டு இப்போது அந்தக்கொடியை அம்போ என்று விட்டு விடாதீர்கள் என்று அமைப்பாளர் என் .ஆர் .தனபாலன் அவர்களிடம் பலரும் முறையிட, என் .ஆர் .தனபாலன், அவர்கள் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களை சந்தித்து சமுதாய மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்ல, அய்யா அவர்கள் எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. வேண்டுமானால் கட்சிக்கு தலைமையேற்று நீங்கள் நடத்திச் செல்லுங்கள் என்று கூறிவிட சமுதாயத்தலைவர்களும் என் .ஆர் .தனபாலன்அவர்களிடம் நீங்கள் தான் கட்சிக்குதலைமை ஏற்றிடவேண்டுமென்றும், 24 மணி நேரம் உழைக்கக்கூடிய கூப்பிட்ட குரலுக்கு ஓடக்கூடிய தமிழகம் முழுக்க சுற்றிவரக்கூடியவர். பட்டி தொட்டியெல்லாம் சமுதாயத்தில் என்ன பிரச்சினை என்றாலும் முன்னெடுத்து செல்லக்கூடிய போராளி கட்சிக்கு தலைமையேற்று என்.ஆர்.தனபாலனிடம் நீங்களே நடத்தங்கள்.நாங்கள் பின்னே இருக்கிறோம் என்று சொல்ல அமைப்பாளராக இருந்த என்.ஆர்.தனபாலன் அவர்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு தலைவாரனார்கள்.
அன்றிலிருந்து இன்று வரை அனைத்து மாவட்டங்களிலும் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் , ஒன்றிய , நகர, கிளை நிர்வாகிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி வீரநடை போட்டுக்க்கொண்டு இருக்கிறது.மாவட்டந்தோறும் பொதுக்கூட்டம், தெருமுனை கூட்டங்கள் கட்சி கொடியேற்று விழா , ஆர்ப்பாட்டம், போராட்டம் என மாதந்தோறும் ஓவ்வொரு மாவட்டமாக பயணித்திக்கொண்டிருக்கிறார் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்
வாழ்க பெருந்தலைவர் காமராஜர் !
வளர்க பெருந்தலைவர் மக்கள் கட்சி !