About ptmkadmin

November 22, 2022

நெல்லை மாவட்டம் சுரண்டையில் சுரண்டை நாடார் வாலிபர் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு நேரில் வந்திருந்து அழைப்பு விடுத்தனர்

நெல்லை மாவட்டம் சுரண்டையில் சுரண்டை  நாடார் வாலிபர் சங்கத்தின் சார்பில் புதிதாக கட்டியுள்ள கட்டிடத்தை திறந்து வைப்பதற்கு  தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை  அழைப்பதற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு  சங்கத்தின் செயலாளர் ஆர்.வி.ராமர், பொருளாளர் ஜி.எஸ்.எஸ்.அண்ணாமலைக்கனி,துணைச்செயலாளர் கணபதிமுருகன்,செய்தித் தொடர்பாளர் ஏ.பி.என்.ஹரிராம்,மற்றும் இந்திய நாடார்கள் பேரமைப்பு தென்காசி மாவட்ட தலைவர் எஸ்.ஆனந்த் காசிராஜன் ஆகியோர் நேரில் வந்திருந்து அழைப்பு விடுத்தனர்

News & Updates
November 22, 2022

அரிமா சங்கம் மாவட்டம் 324 சார்பில் சென்னை வியாசர்பாடி வ.உ.சி. வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.

அரிமா சங்கம் மாவட்டம் 324 சார்பில் சென்னை வியாசர்பாடி வ.உ.சி. வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவ – மாணவிகளை  தேர்வு செய்து அவர்களுக்கு நானும் மாவட்ட ஆளுநர் மணிவண்ணன் இணைந்து பரிசுகளை வழங்கினோம்.நிகழ்ச்சியில் முன்னாள் பன்னாட்டு அரிமா சங்க இயக்குனர் ஆர்.சம்பத்,ஆளுநர்கள் சி.சி.ஜானி, பாக்கியலட்சுமி,முதல் துணை ஆளுநர் ராஜேஸ்தவே ,இரண்டாம் துணை ஆளுநர் டி.முருகேஷ் குமார்,மாவட்ட செயலாளர் ஜி .எஸ்.பாலாஜி,பொருளாளர் மகேந்திரன்,அரிமா விஜயகுமார்,அரிமா பாலகுமார்,அரிமா வசந்தா ரவிச்சந்திரன் […]

News & Updates
November 22, 2022

தி.மு.க.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களின் இல்லத் திருமணம்

தி.மு.க.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

News & Updates
November 22, 2022

அயன்புரம் எஸ்.சௌந்தர் முருகன் – எஸ்.வள்ளி சௌந்தர் முருகன் ஆகியோரது மகள் பானுப்பிரியா – சதீஸ்குமார் திருமணம். மணமக்களை வாழ்த்தினேன்

அயன்புரம் எஸ்.சௌந்தர் முருகன் – எஸ்.வள்ளி சௌந்தர் முருகன்  ஆகியோரது மகள் பானுப்பிரியா – சதீஸ்குமார்  திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

News & Updates
November 22, 2022

மழையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்

அன்பிற்குரிய சமுதாய சொந்தங்களுக்கு அன்பான வேண்டுகோள். சென்னையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து அங்கங்கே வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. பல இடங்களில் மழை  நீர் வடியாமல் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இன்னும் மூன்று நாளைக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.எனவே மழையில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள்.அவர்களிடம் நாங்கள் இருக்கிறோம் என்ற தைரியத்தையும் ஆறுதலையும்  […]

News & Updates
November 22, 2022

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளையும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகிறோம்

முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளையும் குழந்தைகள் தின விழாவாக கொண்டாடி மகிழும் இந்த நேரத்தில் குழந்தைகள் இறைவனுக்கு சமம் என்பார்கள்.அவர்களுக்கு பொய் பேச தெரியாது.கள்ளங்கபடம் இல்லாமல்,சிரித்த முல்லையாய்,எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அனைவரது துன்பங்களையும் மறக்க செய்யும் ஒரு அற்புத பிறவி குழந்தைகள்.எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம்.அவர்களை ஒவ்வொருவரும் மகிழ்ச்சியோடு அரவணைத்து அன்பை பொழிய  வேண்டும் என்று குழந்தைகள் தின விழாவில் கேட்டுக்கொள்கிறேன்.

News & Updates
November 22, 2022

மகள் ஸ்ரீமதி – ஆகாஷ் திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

அம்பத்தூர் நாடார் உறவின் முறை சங்கம் டிரஸ்டின் தலைவர் எஸ்,கேசவன் நாடார் அவர்களின் பேத்தியும் அம்பத்தூர் நாடார் உறவின்முறை சங்கத்தின் செயலாளரும் கே.முத்துராஜ் நாடார் – எம்.நளாயினி  ஆகியோரது மகள் ஸ்ரீமதி – ஆகாஷ் திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

News & Updates
November 22, 2022

சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் டி.மகாலிங்கம் – சுமதி ஆகியோரது மகன் தினகரன் – ஷர்மிளா திருமண வரவேற்பு

சமத்துவ மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் டி.மகாலிங்கம் – சுமதி ஆகியோரது மகன் தினகரன் – ஷர்மிளா திருமண வரவேற்பு நேற்று நவம்பர் 13 ந் தேதி மாலை நடைபெற்றது.நான் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.

News & Updates
September 1, 2022

திருமதி. T.லீலாவதி அம்மா அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார் !

நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன  சங்க செயலாளரும் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனரும்  நெல்லை தட்சிணமாற நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளருமான  தம்பி T.ராஜ்குமார் அவர்களின் தாயார் திருமதி. T.லீலாவதி அம்மா ( வயது 84 ) அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு மிகவும் துயறுற்றேன். அம்மா அவர்களுக்கு எங்கள் ஊர்  வாழையடி என்றாலும் மிகவும் செல்வாக்கான குடும்பம்.ஊரில் எந்த நிகழ்ச்சி என்றாலும் முன்நின்று நடத்தக் கூடியவர்கள் . […]

News & Updates
September 1, 2022

டாக்டர் J.P.ராஜ்குமார் அவர்களுக்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் !

மருத்துவத்துறையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வரும் பெருமைக்குரிய எங்கள் இனிய நண்பர் டாக்டர் J.P.ராஜ்குமார் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் வசந்தா மருத்துவமனண நடத்தி அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு மிகக் மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்து வருகிறார்கள். மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். அதனால் தான் என்னவோ தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் அவரது அன்பில் நட்பில் இருப்பார்கள். டாக்டர் அவர்கள் எப்பொழுதுமே என்மீதும் என் குடும்பத்தின் மீதும் அளவிட முடியாத […]

News & Updates