About ptmkadmin

December 3, 2022

மாற்றுத்திறனாளிகள் எப்போதும் தன்னம்பிக்கை நிரம்பியவர்கள், சமுதாயத்தில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் எப்போதும் தன்னம்பிக்கை நிரம்பியவர்கள்  மற்றவர்களைப் போல் அவர்களும் எத்தனையோ துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடலில் தான் பிரச்சினை தவிர உள்ளத்திலும் இல்லை உழைப்பிலும் இல்லை.சமுதாயத்தில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்.நாம் அவர்களுக்கு உதவுவது என்பது இரக்கப்பட்டு அல்ல .அது நமது கடமை என்று ஒவ்வொருவரும் எண்ண  வேண்டும். தமிழக அரசு அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கினாலும் இன்னும் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று […]

News & Updates
December 1, 2022

தமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் பெருகி வருகின்றன. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை

தமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் பெருகி வருகின்றன சென்னை மணலி யை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது மனைவி மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கிய  பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.  இதுவரை தமிழகத்தில் மட்டும் 34 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்திருக்கிறார்கள்.இது மிகவும் வேதனையான விஷயம்.சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்தை  தடை செய்ய  நிறைவேற்றப்பட்ட புதிய […]

News & Updates
November 30, 2022

திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தொடங்கிய அம்மா உணவகங்களை மூடி ஏழைகளுடைய வயிற்றில் அடித்தார்கள்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும்  தொடங்கிய அம்மா உணவகம் குறைந்த விலையில்  நல்ல முறையில் இயங்கி ஏழைகளுக்கு  உணவு வழங்கி வந்தது..அதன்  மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் தங்கள் பசியை போக்கிக் வந்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அங்கங்கே அம்மா உணவகங்களை மூடி ஏழைகளுடைய வயிற்றில் அடித்தார்கள்.கடமைக்கு ஏதோ ஒரு சில இடங்களில் மற்றும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன .அதுவும் முறையான பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை நகர  மேயர் பிரியா அம்மா […]

News & Updates
November 23, 2022

தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது கவிஞர் வைரமுத்து,கவிஞர் காசிமுத்துமாணிக்கம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்,கவிஞர் வைரமுத்து,கவிஞர் காசிமுத்துமாணிக்கம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

News & Updates
November 22, 2022

தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய தமிழறிஞர் ஒளவை நடராஜன்அவர்கள் காலமானதை கேள்விபட்டவுடன் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்.

தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய தமிழறிஞர் ஒளவை நடராஜன்அவர்கள் காலமானதை கேள்விபட்டவுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்  அவரது  இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

News & Updates
November 22, 2022

தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு வருத்தமுற்றேன்.

தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியவர்.நல்ல சிந்தனையாளர்,எழுத்தாளர்,இலக்கிய பேச்சாளர்,தஞ்சை பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்,ஆல் இந்தியா ரேடியோவில் பல ஆண்டுகளாக இயக்குனராக பணியாற்றியவர் இப்படி பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.தமிழகஅரசின் கலைமாமணி விருதும் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். அவரது இழப்பு என்பது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல.தமிழ் சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும்.அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

News & Updates
November 22, 2022

இன்று உலக மீனவர் தினம் என்றதும் எம்.ஜி.ஆர்..பாடிய “தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இன்று உலக மீனவர் தினம் என்றதும் எம்.ஜி.ஆர்..பாடிய “தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்கிற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.கடலுக்கு போகும் மீனவர்கள் அனைவரும் உயிரை பணயம் வைத்து தான் தொழில் செய்கிறார்கள்.காற்று, மழை,சுனாமி, போன்ற பேரழிவுகள் வரும் என்று தெரிந்தும் அவர்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அனைவருக்கும் மீனவர் தின வாழ்த்துக்கள்.

News & Updates
November 22, 2022

வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சமபவம் சினிமா உலகிற்கு பேரிழப்பாகும்.

மிக சிறந்த சினிமா வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த சமபவம்  சினிமா உலகிற்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும்,உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

News & Updates
November 22, 2022

பெருந்தலைவர் மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டம் பரணிபுத்தூர் கிளை தலைவர் தி.சீனிவாசன் அவர்களுடைய புதுமனை புகுவிழா நேரில் வந்து அழைப்பிதழை வழங்கினார்கள்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தென் சென்னை மேற்கு மாவட்டம் பரணிபுத்தூர் கிளை தலைவர் தி.சீனிவாசன் அவர்களுடைய புதுமனை புகுவிழா அழைப்பிதழை  தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்களுக்கு  வழங்க மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் த உதயகுமார்,மாவட்ட தலைவர் ஆர். பாலமுருகன்.செயலாளர் சுப்பிரமணி மற்றும் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நேரில்  வந்து அழைப்பிதழை வழங்கினார்கள்.

News & Updates
November 22, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னை கிரீன் வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னை கிரீன் வேஸ் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் பூரணமாக குணமாகி வீட்டுக்கு வந்து தொடர்ந்து கட்சிப் பணி ஆற்ற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

News & Updates