புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் முதல்வர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.அவர்களுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ் குமார்,மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம் ஆகியோர் உடன் இருந்தனர் .
சிக்கிம் மலைப்பாதையில் ராணுவ வீரர்களை அழைத்து சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்து 16 ராணுவ வீரர்கள் மரணமடைந்த செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் .விபத்தில் மரணமடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.விபத்தில் படுகாயமடைந்த ராணுவ வீரர்கள் விரைவில் பரிபூரணமாக குணமடைந்து திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு என்.ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள்.
அ இ அ தி மு க நிறுவனரும் தமிழ் திரை உலகில் முடிசூடா மன்னராக,தமிழக முதல்வராக 10 ஆண்டுகள் மக்கள் மனதில் என்றும் நீடித்து நிலைத்து மங்காப் புகழுடன் திகழும் புரட்சித்தலைவர்,பொன்மனச் செம்மல் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் எம்.ஜி.ஆர். அவர்களின் 35 வது நினைவு தினம் இன்று. எம்.ஜி.ஆர்.அ இ அ தி மு க என்கிற புதிய கட்சியை தொடங்கி தன்னிகரில்லா தலைவராக தோன்றி பெண்கள் மனதில் இமயமாக உயர்ந்து காலத்தால் அழியாத […]
தமிழ்நாடு நாடார் பேரவையின் ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக ஈரோடு தீ.ராஜேஷ்குமார் அவர்களை மாநில துணைத் தலைவர் பி.லோகநாதன் அவர்களின் பரிந்துரையின் படி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்தார்கள். ஈரோடு தீ.ராஜேஷ்குமார் அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நன்றியை தெரிவித்தார்.தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் ஈரோடு தீ.ராஜேஷ்குமார் அவர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.அருகில் பெருந்தலைவர் […]
தமிழ்நாடு நாடார் பேரவை புதிய மாநில துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கரூர் பி.லோகநாதன் அவர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்.தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் கரூர் பி.லோகநாதன் அவர்களுக்கு நியமன கடிதத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன்,கரூர் மாவட்ட செயலாளர் சேகர்,தமிழ்நாடு நாடார் பேரவையின் கரூர் மாவட்ட அமைப்பாளர் கூடலரசன்,ஈரோடு மாநகர் […]
தமிழகத்தில் மது போதை கலாசாரம் நாளுக்கு நாள் மாணவ – மாணவிகளிடையே கரையானைப் போல வெகு வேகமாக பரவி வருகிறது.சமூக வலைதளங்களில் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதும்,புகை பிடிப்பதும்,மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வந்து ஆசிரியர்களை தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு மாணவன் பள்ளி சீருடையில் மது குடித்துவிட்டு போதையில் தள்ளாடி சாலையில் விழுந்துவிட்டான். அவனுடன் படிக்கும் சக மாணவன் அந்த மாணவனை கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்து சென்று இருக்கிறான்.இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கிறது.மது […]
தமிழ்நாடு நாடார் பேரவை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக மாயவரத்தை சேர்ந்த பி.கிருஷ்ணசாமி அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்திருக்கிறார்கள். பி.கிருஷ்ணசாமி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று திருமண நாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன் தம்பதியினர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடும் மன மகிழ்வோடும் இல்லறத்தில் நல்லறம் கண்டு பெரும் செல்வத்தோடும் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.பிரபாகரனை பொறுத்தவரை கட்சி கூட்டம் என்றாலும் குடும்ப நிகழ்ச்சி என்றாலும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வார் அவர்கள் குடும்பத்தினர் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திரு கூடியவர்கள் […]
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ராயபுரம் தொகுதி தலைவர் என்.என்.கார்டன் மோகன் அவர்களின் மகள் எஸ்.காயத்ரி – ஆர்.கிஷோர் கார்த்திக் ஆகியோரது நிச்சயதார்த்த விழா நேற்று டிசம்பர் 5 ந் தேதி ராயபுரத்தில் நடந்தது.விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதியில் கவுடா நாடார் சங்கத்தின் குடும்ப விழா டிசம்பர் 11 ந் தேதி திருப்பதியில் நடக்க இருக்கிறது.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை அழைப்பதற்கு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பதி மாவட்ட கவுடா தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் துளசி ராம், ஆந்திரா கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட பொதுச்செயலாளர் முனி சேகர் கவுடா,ஆந்திர கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட துணைத் […]