தமிழகத்தில் மது போதை கலாசாரம் நாளுக்கு நாள் மாணவ – மாணவிகளிடையே கரையானைப் போல வெகு வேகமாக பரவி வருகிறது.சமூக வலைதளங்களில் மாணவிகள் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதும்,புகை பிடிப்பதும்,மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வந்து ஆசிரியர்களை தாக்குவதும் வாடிக்கையாகிவிட்டது.சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ஒரு மாணவன் பள்ளி சீருடையில் மது குடித்துவிட்டு போதையில் தள்ளாடி சாலையில் விழுந்துவிட்டான். அவனுடன் படிக்கும் சக மாணவன் அந்த மாணவனை கைத்தாங்கலாக பள்ளிக்கு அழைத்து சென்று இருக்கிறான்.இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கிறது.மது […]
தமிழ்நாடு நாடார் பேரவை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக மாயவரத்தை சேர்ந்த பி.கிருஷ்ணசாமி அவர்களை தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நியமனம் செய்திருக்கிறார்கள். பி.கிருஷ்ணசாமி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று திருமண நாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் பெ.பிரபாகரன் தம்பதியினர் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடும் மன மகிழ்வோடும் இல்லறத்தில் நல்லறம் கண்டு பெரும் செல்வத்தோடும் பிள்ளைகளுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.பிரபாகரனை பொறுத்தவரை கட்சி கூட்டம் என்றாலும் குடும்ப நிகழ்ச்சி என்றாலும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வார் அவர்கள் குடும்பத்தினர் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திரு கூடியவர்கள் […]
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் ராயபுரம் தொகுதி தலைவர் என்.என்.கார்டன் மோகன் அவர்களின் மகள் எஸ்.காயத்ரி – ஆர்.கிஷோர் கார்த்திக் ஆகியோரது நிச்சயதார்த்த விழா நேற்று டிசம்பர் 5 ந் தேதி ராயபுரத்தில் நடந்தது.விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதியில் கவுடா நாடார் சங்கத்தின் குடும்ப விழா டிசம்பர் 11 ந் தேதி திருப்பதியில் நடக்க இருக்கிறது.விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் பேரவை தலைவரும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவருமான என்.ஆர்.தனபாலன் அவர்களை அழைப்பதற்கு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பதி மாவட்ட கவுடா தொழிலாளர் நல சங்கத்தின் தலைவர் துளசி ராம், ஆந்திரா கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட பொதுச்செயலாளர் முனி சேகர் கவுடா,ஆந்திர கவுடா சங்கத்தின் திருப்பதி மாவட்ட துணைத் […]
மாற்றுத்திறனாளிகள் எப்போதும் தன்னம்பிக்கை நிரம்பியவர்கள் மற்றவர்களைப் போல் அவர்களும் எத்தனையோ துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு உடலில் தான் பிரச்சினை தவிர உள்ளத்திலும் இல்லை உழைப்பிலும் இல்லை.சமுதாயத்தில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்.நாம் அவர்களுக்கு உதவுவது என்பது இரக்கப்பட்டு அல்ல .அது நமது கடமை என்று ஒவ்வொருவரும் எண்ண வேண்டும். தமிழக அரசு அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கினாலும் இன்னும் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று […]
தமிழகத்தை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் பெருகி வருகின்றன சென்னை மணலி யை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் தனது மனைவி மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்கிய பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்து வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். இதுவரை தமிழகத்தில் மட்டும் 34 பேர் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்திருக்கிறார்கள்.இது மிகவும் வேதனையான விஷயம்.சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நிறைவேற்றப்பட்ட புதிய […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தொடங்கிய அம்மா உணவகம் குறைந்த விலையில் நல்ல முறையில் இயங்கி ஏழைகளுக்கு உணவு வழங்கி வந்தது..அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் தங்கள் பசியை போக்கிக் வந்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் அங்கங்கே அம்மா உணவகங்களை மூடி ஏழைகளுடைய வயிற்றில் அடித்தார்கள்.கடமைக்கு ஏதோ ஒரு சில இடங்களில் மற்றும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன .அதுவும் முறையான பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் சென்னை நகர மேயர் பிரியா அம்மா […]
தமிழறிஞர் அவ்வை நடராஜன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபோது முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்,கவிஞர் வைரமுத்து,கவிஞர் காசிமுத்துமாணிக்கம் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தேன்.
தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றிய தமிழறிஞர் ஒளவை நடராஜன்அவர்கள் காலமானதை கேள்விபட்டவுடன் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.