தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு வருத்தமுற்றேன்.
தமிழறிஞர் ஒளவை நடராஜன் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியவர்.நல்ல சிந்தனையாளர்,எழுத்தாளர்,இலக்கிய பேச்சாளர்,தஞ்சை பல்கலை கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்,ஆல் இந்தியா ரேடியோவில் பல ஆண்டுகளாக இயக்குனராக பணியாற்றியவர் இப்படி பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.தமிழகஅரசின் கலைமாமணி விருதும் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். அவரது இழப்பு என்பது அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல.தமிழ் சமுதாயத்துக்கும் பேரிழப்பாகும்.அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.


















