September 1, 2022

திருமதி. T.லீலாவதி அம்மா அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்தார் !

நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன  சங்க செயலாளரும் நெல்லை நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனரும்  நெல்லை தட்சிணமாற நாடார் சங்கத்தின் பொதுச்செயலாளருமான  தம்பி T.ராஜ்குமார் அவர்களின் தாயார் திருமதி. T.லீலாவதி அம்மா ( வயது 84 ) அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு மிகவும் துயறுற்றேன். அம்மா அவர்களுக்கு எங்கள் ஊர்  வாழையடி என்றாலும் மிகவும் செல்வாக்கான குடும்பம்.ஊரில் எந்த நிகழ்ச்சி என்றாலும் முன்நின்று நடத்தக் கூடியவர்கள் . […]

News & Updates
September 1, 2022

டாக்டர் J.P.ராஜ்குமார் அவர்களுக்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார் !

மருத்துவத்துறையில் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றி வரும் பெருமைக்குரிய எங்கள் இனிய நண்பர் டாக்டர் J.P.ராஜ்குமார் அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் வசந்தா மருத்துவமனண நடத்தி அப்பகுதி ஏழை எளிய மக்களுக்கு மிகக் மிகக்குறைந்த கட்டணத்தில் மருத்துவம் செய்து வருகிறார்கள். மிகவும் எளிமையானவர். பழகுவதற்கு இனிமையானவர். அதனால் தான் என்னவோ தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகள் எல்லாம் அவரது அன்பில் நட்பில் இருப்பார்கள். டாக்டர் அவர்கள் எப்பொழுதுமே என்மீதும் என் குடும்பத்தின் மீதும் அளவிட முடியாத […]

News & Updates
August 19, 2022

டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு தலைவர் என் ஆர்.தனபாலன் பாராட்டுக்களை தெரிவித்தார்!

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்  இன்று காலை காவிரியின் உபரிநீர் தருமபுரியின் உயிர் நீர் திட்டத்தை செயல்படுத்த ஒகேனக்கல் தொடங்கி பொம்மிடி வரை 3 நாள் நடைபயணம் மேற்கொள்ளும்  அவருடைய பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்கள்.

News & Updates
August 18, 2022

“நெல்லை கண்ணன் அவர்கள் காலமான செய்தி கேள்விப்பட்டு வருத்தமுற்றேன்” என்று என்.ஆர்.தனபாலன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்!

பிரபல இலக்கியவாதியும், பட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளரும். மூத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியுமான நெல்லை கண்ணன் அவர்கள் காலமான  செய்தி கேள்விப்பட்டு வருத்தமுற்றேன். மேடைகளில் பேசும் போது காமராஜர் பற்றி குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அந்த அளவுக்கு காமராஜரின் உண்மை விசுவாசி. நெல்லை தமிழ் பேசி அனைவரையும் கவர்ந்து இழுக்கக்கூடிய வ்ர். பழகுவதற்கு இனிமையானவர். எதையும் தைரியமாக பேசக்கூடியவர். அப்படிப்பட்டவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு நாடார்  சார்பிலும் என் சார்பிலும் […]

News & Updates
August 18, 2022

தொல் .திருமாவளவன் 60வது பிறந்தநாள் விழா தலைவர் என்.ஆர்.தனபாலன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான தொல் .திருமாவளவன் அவர்களின்  60 வது  பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள்  திருமாவளவனை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.கட்சிக்கு அப்பாற்பட்டு இருவரும் நல்ல நண்பர்கள் என்கிற முறையில் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்த தோடு இருவரும் ஆரத் தழுவிக்கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள்.

News & Updates
July 20, 2022

தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் T.உதயகுமார் தலைவர் என். ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்

இன்று பிறந்த நாள் காணும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் T.உதயகுமார் அவர்கள் இன்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் என். ஆர்.தனபாலன் அவர்களை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து பெற்றார். தலைவர் அவர்கள் உதயகுமாருக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள் பரிசு வழங்கினார்கள். அருகில் மாவட்ட செயலாளர் ஆர்.பாலமுருகன், பொருளாளர் எம் சுப்பிரமணி, அமைப்பாளர் செல்வராஜ், பல்லாவரம் தொகுதி தலைவர் ராஜ், தி.நகர்.தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ.பாலமுருகன், […]

News & Updates
July 19, 2022

இளைஞரணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமாருக்கு சிறந்த சமூக சேவகர் விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்!

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமார் அவர்களுக்கு சிறந்த சமூக சேவகர்  சென்ற உயரிய விருதை தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள்  கெருகம்பாக்கம் நாடார் சங்கத்தின்  ஆண்டு விழாவில் வழங்கினார்கள்.அருகில் பெருந்தலைவர் மக்கள் கட்சி ,தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன்,சங்கத்தின் தலைவர் உதயகுமார்,பொதுச் செயலாளர் பாலமுருகன்,தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ்  உள்ளனர்.

News & Updates
July 19, 2022

காமராஜர் 120வது பிறந்தநாள் விழா தலைவர் என்.ஆர்.தனபாலன் நலத்திட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்கள்!

கெருகம்பாக்கம் நாடார் சங்கத்தின் சார்பில் காமராஜர் 120 வது  பிறந்தநாள், சங்கத்தின் குடும்ப விழா, சங்கத்தின் 4 ம் ஆண்டு விழா என முப்பெரும் விழா ஜூலை 17  ந்  தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி கெருகம்பாக்கத்தில் நடைபெற்றது. விழா சங்கத்தின் தலைவர் தி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் ஆர்.பாலமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.விழாவில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் காமராஜர் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர்  மக்கள் கட்சி தலைவர் […]

News & Updates
July 14, 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியை தலைவர் என்.ஆர்.தனபாலன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்!

அ.இ.அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி  கே.பழனிச்சாமி அவர்களை பசுமைவழிச்சாலை  முகாம் இல்லத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சந்தித்து பொன்னாடை  அணிவித்து மலர்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

News & Updates
July 12, 2022

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்முவை சந்தித்து தலைவர் என்.ஆர்.தனபாலன் ஆதரவு தெரிவித்தார்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட்டணி வெற்றி வேட்பாளர் திரவுபதி முர்மு அவர்கள் நேற்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் திரவுபதி முர்மு அவர்களுக்கு  சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தலைவருடன்  பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில வர்த்தகரணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா ஆகியோர் உள்ளனர்.

News & Updates