முகப்பேர் வட்டார நாடார்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் ஆர்.தேன்ராஜன் அவர்களுடைய இல்ல திருமண விழாவில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்துகொண்டார்.
முகப்பேர் வட்டார நாடார்கள் மகாஜன சங்கத்தின் தலைவர் ஆர்.தேன்ராஜன் அவர்களுடைய மைத்துனரும் தூத்துக்குடி மாவட்டம் புங்கவர் நத்தம் ஏ.என்.செந்தூர்பாண்டியன் – எஸ்.சசிகலாவின் மகன் எஸ்.கார்த்திகேயன் – பி.ஹனுஷா ஆகியோரது திருமணம் நவம்பர் 15 ந் தேதி சென்னையில் நடந்தது. பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
ஈரோடு வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் T.அருள்சிங் அவர்கள் காலமான!
பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் T.அருள்சிங் அவர்கள் காலமான செய்தியை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். அவருடைய இழப்பு சாதாரமானது அல்ல, அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கும் ஈரோடு வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தலைவர் என் ஆர்.தனபாலன் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்கள்.
மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன் – ஜெயஜோதி இல்ல விழாவில் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் கலந்து கொண்டு செல்வி அருந்ததியை வாழ்த்தினார்கள்!
தமிழ்நாடு நாடார் பேரவை மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.தாளைக்கண்ணன் – ஜெயஜோதி ஆகியோரது மகள் த.அருந்ததியின் பூப்புனித நீராட்டு விழா நேற்று நவம்பர் 14 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மதுரையில் நடை பெற்றது. விழாவில் பேரவையின் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செல்வி அருந்ததியை ஆசிர்வதித்து வாழ்த்துரை வழங்கினார்கள் மற்றும் நாடார்கள் முன்னேற்ற சங்கத்தலைவர் பெரிஸ் பி.மகேந்திரவேல், மதுரை சிம்மக்கல் நாடார் உறவு முறை பொது செயலாளர் ஆர்.வி.டி.ராமையா […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மணலி மாத்தூர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாதவரம் தொகுதி தலைவர் தங்க குமார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
காமராஜர் ஆதித்தனார் கழகத்தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ் அவர்களின் இல்ல திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மணமக்களை வாழ்த்தினார்கள்!
காமராஜர் ஆதித்தனார் கழகத்தலைவர் எஸ்.சிலம்பு சுரேஷ் அவர்களின் மகள் ஸ்டெபி ஷீன் ஸ்மைல் – ரோணி ராபின் கார்வின் ஆகியோரது திருமணம் நேற்று நவம்பர் 11 ந் தேதி நாகர்கோவில் நடைபெற்றது. திருமணத்திற்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என்.ஆர் தனபாலன் அவர்கள் மகனும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவருமான என்.ஆர்.டி பிரேம்குமார் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் எம். ஆர்.சிவகுமார் குமரி மண்டலத்தலைவர் என்.அனந்தகிருஷ்ணன் குமரி கிழக்கு மாவட்ட துனண […]
பெருந்தலைவர் மக்கள் கட்சி சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார் !
பெருந்தலைவர் மக்கள் கட்சி சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா அவர்களின் சகோதரர் மகனுடைய 2 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வாழ்த்துப் பெறுவதற்கு குடும்பத்தினருடன் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள். தலைவர் குழந்தையை தூக்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.
ஸ்ரீ பெரும்புதூர் ஆர்.அய்யநாதன் – ஏ.இந்துமதி ஆகியோரது மகன் திருமணத்தை தலைவர் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்
ஸ்ரீ பெரும்புதூர் ஆர்.அய்யநாதன் – ஏ.இந்துமதி ஆகியோரது மகன் ஏ.சிவப்பிரகாசஷ் – விஷ்ணுபிரியா ஆகியோரது திருமணத்தை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்கள் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள். தலைவருடன் மாநில வர்த்தகரணி செயலாளர் த .சோலையப்பன், மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
ராஜீவ்-பிந்து 25-ம் ஆண்டு திருமணநாள் விழா என்.ஆர்.டி. குழுமத்தின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் திருமதி.வயலட் தனபாலன் அவர்களும் தம்பதியினரை வாழ்த்தினார்கள்.
என்.ஆர்.டி. குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் மேலாளர் ராஜீவ் – பிந்து அவர்களுடைய 25 ம் ஆண்டு திருமண நாள் விழா நேற்று நவம்பர் 7 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. என்.ஆர்.டி. குழுமத்தின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களும் திருமதி வயலட் தனபாலன் அவர்களும் நேரில் சென்று தம்பதியினரை வாழ்த்தினார்கள்.
நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர் திருமண அழைப்பிதழை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களிடம் வழங்கினார்
முகப்பேர் சுற்று வட்டார நாடார் மகாஜன சங்கத்தின் தலைவர் தேன் ராஜன் அவர்களுடைய சகோதரி மகன் திருமணம் நவம்பர் 15 ந் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. திருமண அழைப்பிதழை தேன்ராஜன் அவர்கள் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களுக்கு நேரில் வந்து வழங்கினார்.
